×

ஏலகிரி மலையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனத்தை இயக்கினால் சிறை: போலீசார் எச்சரிக்கை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வினியோக விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஏலகிரிமலை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் தலைமையிலான போலீசார் ஏலகிரி மலை சுற்றுலாவுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 18 வயது பூர்த்தி அடையாத எந்த நபரும் மோட்டார் வாகனம் இயக்கக் கூடாது. அவ்வாறு மீறும்போது வாகனத்தின் உரிமையாளர் பொறுப்பாவார். வாகன உரிமையாளர் ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர்களை வாகனத்தை ஓட்ட அனுமதித்தால் 3 மாதம் வரை நீடிக்கக் கூடிய சிறை தண்டனை அல்லது ₹1000 ரூபாய் முதல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க நேரும்.

18 வயதை அடையாத எந்த நபரும் பொது இடத்தில் மோட்டார் வாகனம் ஓட்டக்கூடாது. வாகனம் உரிமம் இல்லாதவர் வாகனம் ஓட்டக்கூடாது. தவறும்பட்சத்தில் ஓட்டுநருக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது 500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும், வாகனம் ஓட்டும்போது, செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனத்தை அதிக வேகம் மற்றும் அபாயகரமாக இயக்கக் கூடாது. குடிபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது. சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். அதிக பாரம், உயரம் ஆட்களை ஏற்றக்கூடாது. வாகனத்தின் சுமைகளின் மேல் ஆட்களை ஏற்றக்கூடாது. இருசக்கர வாகனத்தில் 2 நபருக்கு மேல் செல்லக்கூடாது உள்ளிட்டவைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் விதிமீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனையடுத்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.



Tags : Yelagiri Hills , Traffic awareness for motorists in Yelagiri Hills Jail for driving under 18: Police warning
× RELATED ஏலகிரி மலையில் குண்டும், குழியுமாக...